கடந்த ஆண்டு டிசம்பரில் டாட்டூ ஆர்ட்டிஸ்ட் அபிஷேக் சப்கல் இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோ பதிவிடப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆண் ஒருவர் தனது காதலியின் பெயரை தனது கீழ் உதட்டில் பச்சை குத்துவது போன்ற வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இந்த வீடியோ டிசம்பர் 2023 இல் இன்ஸ்டாகிராமில் tatto_abhishek_sapkal_4949 என்ற நபரால் பகிரப்பட்டது மேலும் இது சமூக ஊடக பயனர்கள் மத்தியில் சிரிப்பலையைத் தூண்டியுள்ளது.
இப்போது வைரலாகும் வீடியோவில், டாட்டூ ஆர்ட்டிஸ்ட் அந்த ஆணின் கீழ் உதடுக்குள் அவரின் காதலியான ‘அம்ருதா’ என்ற பெயரை பதித்ததில் இருந்து தொடங்குகிறது. மேலும் அந்த காணொளியில் அவர் பச்சை குத்துவதை ஆரம்பத்தில் தொடங்கி இறுதிவரை தனது பார்வையாளர்களுக்கு அவர் காட்டுகிறார். பின்னர் அவர் அந்த காணொளியில், "காதல்" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார். இதுவே இப்போது வைரலாகி வருகிறது!.
0 Comments