கூமாபட்டி தங்கபாண்டிக்கு பேருந்து விபத்து – தோள்பட்டை எலும்பு முறிவு!

 



Pic:கூமாபட்டி தங்கபாண்டி


விருதுநகர், செப்.16:

சமூக வலைதளங்களில் வைரலான “கூமாபட்டி தங்கபாண்டி”, பேருந்து விபத்தில் காயமடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


சென்னை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, விருதுநகர் மாவட்டம் வத்திரைப் பக்கத்திலுள்ள கூமாபட்டி கிராமத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அவர் பயணம் செய்திருந்த பேருந்து, கிருஷ்ணன் கோவில் அருகே திடீரென நிறுத்தப்பட்டது. அந்த நேரத்தில் தங்கபாண்டி, பேருந்தின் கதவுக்கு அருகில் இருந்த அவர் தட்டுப்பட்டு கீழே விழுந்தார்.


இதன் விளைவாக, அவரது இடது தோள்பட்டை எலும்பில் முறிவு ஏற்பட்டது. உடனடியாக அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.


மருத்துவர்கள் கூறியதாவது:


“தங்கபாண்டியின் இடது தோள்பட்டை எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். நிலைமை கவலைக்கிடமாக இல்லை. சில வாரங்கள் ஓய்வு எடுத்தால் முழுமையாக குணமடைய வாய்ப்பு உள்ளது” என தெரிவித்தனர்.


இதுகுறித்து தங்கபாண்டி பேசியதாவது:


“பேருந்து ஓட்டுநரின் அலட்சியத்தால் திடீர் பிரேக் போட்டதால் தான் நான் காயமடைந்தேன். இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.


கூமாபட்டி தங்கபாண்டி, “எங்க ஊரே பார்த்தும்… கூமாபட்டிக்கு வாங்க” என்ற வசனங்களின் மூலம் ரீல்ஸில் வைரலானவர். பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், சமூக வலைதளங்களிலும் அதிக பிரபலமடைந்தார்.


Post a Comment

0 Comments