25 ஆண்டுகள் முயற்சியில் பாழடைந்த நிலத்தை காடாக மாற்றியவர் – “இந்தியாவின் வன மனிதர்” சரவணன்!.

 


Pic: இந்தியாவின் வன மனிதர்” சரவணன் 

புதுச்சேரி அருகே உள்ள பூத்துறையில் வசிக்கும் டி. சரவணன், கடந்த 25 ஆண்டுகளாக தனது வாழ்க்கையை இயற்கைக்கு அர்ப்பணித்துள்ளார். ஒருகாலத்தில் வெறிச்சோடியிருந்த 100 ஏக்கர் பாழடைந்த நிலம், இன்று பசுமை சூழ்ந்த ‘அரண்யா காடு’ ஆக மாற்றப்பட்டுள்ளது.


சரவணன் அவர்கள், 1994-ஆம் ஆண்டு முதல் மரக்கன்றுகளை நடத் தொடங்கினார். மழை நீரை சேமிக்கும் வகையில் குட்டைகள், கட்டுகள் அமைத்து, நிலத்தின் உயிர்த்தன்மையை மீட்டெடுத்தார். இன்று, அந்தக் காட்டில் 900-க்கும் மேற்பட்ட உள்ளூர் இனங்கள், 1 கோடி மரங்கள், மேலும் 240-க்கும் மேற்பட்ட பறவைகள், பட்டாம்பூச்சிகள், பாம்புகள், சிறிய விலங்குகள் என அற்புதமான உயிரியல் பல்வகைச் சமூகங்கள் வாழ்கின்றன.


அரண்யா காடு இன்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு மட்டுமின்றி, இயற்கையை நேசிக்கும் அனைவருக்கும் ஒரு பாடமாகவும், பிரேரணையாகவும் உள்ளது.


சரவணன் அவர்கள் பற்றிய செய்தி, சமூக வலைத்தளங்களில் பரவி, பலருக்கு இயற்கையை காப்போம் என்ற உறுதியை விதைத்துள்ளது.

Post a Comment

0 Comments