ஹன்சிகா இத்தனை குழந்தைகளுக்கு அம்மாவா அவங்களே சொல்லி இருக்காங்க!


தமிழ் சினிமாவில் பிரபல நடிகையா வலம் வரக்கூடியவங்க தான் நடிகை ஹன்சிகா இப்போ இவங்க திரில்லர் படங்களை தேர்ந்தெடுத்து ஆர்வம் காட்டிட்டு வந்துட்டு இருக்காங்க. சுந்தர் சி தயாரிப்புல வெளியான அரண்மனை ஒன்று, இரண்டு பாகங்களையும் நடிச்சிருக்காங்க அதுக்கப்புறம் மகா, ரவுடி பேபி மாதிரியான படங்களையும் நடிச்சிருக்காங்க இப்ப பாத்தீங்கன்னா இவங்க நடிச்சிருக்க கூடிய கார்டியன் படம் மார்ச் எட்டாம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு வெளிய வர போகுது.



இந்த படத்தப் பத்தி சொல்லனும்னா சிம்பு நடித்திருக்க கூடிய வாலு படத்தின் இயக்குனர் விஜயசுந்தர் தயாரிப்புல தான் இந்த படம் உருவாகிறது இதுக்கான ப்ரோமோஷன் அண்மையில் நடந்த நிலையில அதுல பேட்டி அளித்து இருக்கிறார்கள் ஹன்சிகா அதன்படி பார்த்தோம்னா என்னோட சின்ன வயசுல என்னோட அம்மா என் பிறந்தநாள் வரும் ஒவ்வொரு சமயத்திலும் வந்து குழந்தைகள் காப்பகத்துக்கு கூட்டிட்டு போவாங்க அதை பாக்கும்போது ரொம்ப வருத்தமா இருக்கும் நான் நடிகையாக மாறி நிறைய பணம் சம்பாதிச்சு ஆதரவற்ற குழந்தைகளை பார்த்துக்கொள்ளனும்னு ஒரு எண்ணம் இருக்கு அதுதான் பண்ணிக்கிட்டு இருக்கேன்னு சொல்லி இருக்காங்க. 


அந்த வகையில முக்கியமான விஷயம் என்னன்னா நானும் நடிகையான பிறகு ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு குழந்தைகளை தத்தெடுத்து இதுவரைக்கும் 31 குழந்தைகளை தத்து எடுத்து இருக்கேன்னு சொல்லி இருக்காங்க. என்னோட மேரேஜ் அப்புறமா எந்த பெரிய மாற்றமும் இல்லவே இல்ல தொடர்ந்து நடிச்சிட்டு தான் இருக்கேன் அதே மாதிரி குழந்தைகளை கவனிக்கிறேன் என்றும் எனவே கார்டியன் படம் நிச்சயமா ரசிகர்களுக்கு பிடிக்கும் என்றும் சொல்லி இருக்காங்க ஹன்சிகா. 

இதையும் படியுங்கள்:

Post a Comment

0 Comments